மா நித்ய பரிபூரணி, தன்னார்வ சேவையாளர், பிடதி பரிபூரணி, ஜனவரி 2013 அன்று தொடங்கிய நிராகார ஸம்யமா 7 வது குழுவில் கலந்துகொண்டோம். இந்த ஸம்யமாவை எந்த ஒரு தடங்கலும் இன்றி இனிமையாக முடித்தோம். காரணம், ஸ்வாமிஜியின் ஸாந்நித்யம் ‘நம்மால் முடியாது’ என்று நாம் நினைக்கும் ஒரு விஷயத்தையும்கூட நமக்குச் சாத்தியமாக்கி விடும். நிராகார ஸம்யமா மூலம் எத்தனையோ உடல்-மன வளங்களைப் பெற்றிருந்தாலும், பரிபூரணிக்குள் அனுபவமான ஆன்மிக அனுபவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 7 நாட்கள் நிராகார இருக்கும் இரண்டாவது நிலையில் முதல் 3 1/2 நாட்கள் தண்ணீர்கூட அருந்தவில்லை. அருந்தவில்லை என்றால், பரிபூரணிக்கு தாகமே எடுக்கவில்லை. 3வது நாளிலிருந்து பரிபூரணிக்குள் அஜபாஜபமும், அன்க்ளட்ச்ங்கும் பரிபூரணியின் முயற்சியின்றியே தொடர்ந்து இரவிலும்கூட நடக்க ஆரம்பித்துவிட்டன. உடல் படுத்திருந்தாலும் உணர்வு இருந்துகொண்டே இருந்தது. அப்போது பரிபூரணிக்குள் நடந்த மிகப்பெரிய கிளிக்: நம் ரிஷிகள், உடலை விட வேண்டுமானால், அன்ன ஆகாரமில்லாமல் அமர்ந்து அப்படியே யோக முறைப்படி உடலை விட்டுவிடுவார்கள் என்று படித்தபோது, நம்மால் அவ்வாறு முடியுமா என்று நினைத்தது உண்டு. ஆனால் இப்போது பரிபூரணியாலும் நினைத்த நேரத்தில் அவ்வாறு செய்ய முடியும் என்ற ஒரு ஆழமான புரிதலும் நம்பிக்கையும் மலர்ந்தது. இதுவரை நான் பார்த்திராத எத்தனையோ காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன. ஒரு காட்சி சில நொடிகள் திரைப்படம் போல் ஓடும். பிறகு அதுவாகவே அன்க்ளட்சிங் ஆகி, யாரோ அந்த ஃபிலிமை கத்தரி வைத்து வெட்டிவிடுவது போல் ‘கட்’ஆகி கீழே விழுந்து மறைந்துவிடும். இதுபோல் தொடர்ந்து நடந்தது, பரிபூரணிக்குள் இருந்த எத்தனையோ ஆண்டுகால ஸம்ஸ்காரங்களை அழித்து துடைத்துவிட்டது போன்று இருந்தது. பரிபூரணி எளிமையான இனிமையான உயிராக மாறினோம்.
குருவின் மகிமையையும் கருணையையும் சாதாரணமான மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பது மட்டுமல்ல, சாதாரணமான மனத்தால் அளவிட முடியாதுங்கூட!
ஸ்வாமிஜி, இந்த நிராகார ஸம்யமா மூலம் சாதாரண மனிதர்களையும் மிக உன்னத ஆன்மிக நிலைக்கு உயர்த்துகிறார்.
Ma Nithya Paripoorani
Volunteer
Bengaluru, India
